நாகை: பேருந்து நிலையங்களில் பரிதவிக்கும் பயணிகள்

1095பார்த்தது
நாகை பணிமனையிலிருந்து பேருந்து நிலையத்திற்கு பேருந்து வந்தது. பேருந்து நிலையத்திற்குள் நுழையும் போதே காத்திருந்த பயணிகள், ஓடிச்சென்று திமு, திமுவென பேருந்துக்குள் ஏற முற்பட்டனர். அப்போது பேருந்துக்குள் ஏறக்கூடாதென கூறி நடத்துநர் சத்தமிட, ஓட்டுநர் படிக்கதவுகளை மூடி கதவுகளை பார்த்து கொண்டே கவனம் சிதறிவிட்டார்.

இதனால் வந்த பேருந்து நின்று கொண்டிருந்த மற்றொரு பேருந்து மீது மோதி நின்றது. மக்களோ இடம் பிடிக்க கூட்டமாக நின்றனர். இதில் இடம் பிடிக்க ஓடி வந்த ஒரு பயணி, கூட்டத்தில் சிக்கி, பேருந்தின் முன்பக்கம் மோதி மயக்கமடைந்து விழுந்தார். அவரை சிலர் தூக்கி சென்று அருகிலுள்ள கடையில் அமர வைத்து முதலுதவி அளித்தனர். அதேநேரம், எங்கே, தங்களுக்கு சீட் கிடைக்காமல் போய்விடுமோ என்று எண்ணிய பயணிகள், பேருந்து படிகட்டு கதவுகள் மூடியிருந்த போதும், திறந்திருந்த ஜன்னல் கண்ணாடிகள் வழியாக உள்ளே ஏறி இடம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேருந்து மீது மோதி ஒருவர் மயக்கமடைந்து கிடைப்பதையோ சிறிதும் கண்டுகொள்ளாமல், அந்த பேருந்து புறப்படுமா? நிறுத்தப்படுமா? என்பது கூட தெரியாமல் அவசர அவரசரமாக ஏறி இடம்பிடித்த சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியோடும், நகைச்சுவையோடும் பார்க்க வைத்தது.

தொடர்புடைய செய்தி