நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் உத்தமசோழபுரம் கிராமத்தில் வெட்டாற்றின் குறுக்கே கடல் நீர் உட்பகுவதை தடுக்க அணை கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக உத்தமசோழபுரம் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கை ஏற்று உத்தம சோழபுரத்தில் கடல் நீர் உப்புவதை தடுக்கும் வகையில் புதிய கடைமடை தடுப்பணை ரூ. 49 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு பணிகள் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் ஒரு சில விவசாயிகள் சார்பில் பூதங்குடியில் தடுப்பணை கட்ட வேண்டும் என தொடர்ச்சியாக போராட்டங்கள் மேற்கொண்டு வருகின்றனர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தமசோழபுரம் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் மனு நாள் கூட்டத்தில் உத்தமசோழபுரத்திலேயே அணையை கட்ட வேண்டும் என கோரிக்கை முழக்கங்களை எழுப்பியவாறு கூட்டரங்கில் உள்ளே நுழைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அரசு தற்போது கட்டி வரும் இடத்திலேயே தொடர்ச்சியாக அணையை கட்ட வேண்டும் இதனால் சுற்று வட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முப்போக சாகுபடி மேற்கொள்ள முடியும் எனவும் இதனால் நிலத்தடி நீர் உயரும் உள்ளிட்ட கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உத்தரவாதம் தெரிவித்தார்.