நாகப்பட்டினம்: திமுக இளைஞர் அணி சார்பில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம்

54பார்த்தது
நாகப்பட்டினம்: திமுக இளைஞர் அணி சார்பில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம்
நாகப்பட்டினத்தில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக இளைஞர் அணி சார்பில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. 

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவைகளுக்கு எதிராக திமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நிதி பகிர்வில் காட்டப்படும் பாரபட்சம், தொகுதி சீரமைப்பில் இழைக்கப்படும் அநீதி குறித்து துண்டு பிரசுரம் நாகப்பட்டினம் வெளிப்பாளையம், புதிய பேருந்து நிலையப் பகுதியில் விநியோகம் செய்யப்பட்டது. 

நாகப்பட்டினம் மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவருமான கௌதமன், நகர மன்ற தலைவர் மாரிமுத்து, இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக், துணை அமைப்பாளர் கலையரசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

அப்போது, மத்திய அரசு அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டு திட்டங்கள் தொடங்கப்படுவதில்லை எனவும் அதற்கு எதிராக போராடும் தமிழக முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களிடம் மாவட்ட செயலாளர் கௌதமன் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்புடைய செய்தி