நாகை மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வந்த செல்வி பேபி பணிமார்கள் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய மாவட்ட வருவாய் அலுவலராக பவணந்தி அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட வருவாய் அலுவலராக பவணந்தி பதவி ஏற்றுக்கொண்டு அதற்கான கோப்புகளில் கையெழுத்திட்டார். புதிய மாவட்ட வருவாய் அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.