நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டம் கோலாகலம்

51பார்த்தது
பிரசித்திபெற்ற நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு: ஆரூரா தியாகேசா என பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்

நாகை மாவட்டம் நாகூரில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த அருள்மிகு நாகவல்லி சமேத நாகநாதசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் பிரம்மோற்சவ விழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக துவங்கியது. இதில் நாள்தோறும் சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது.

ஆலயத்தில் இருந்து சிவ வாத்தியங்கள் முழங்க நாகநாதர் திருத்தேருக்கு எழுந்து அருளினார். அதனைத் தொடர்ந்து நாகூர் தேரடி வீதியில் தொடங்கிய திருத்தேரினை பக்தர்கள் வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் திருத்தேரில் அமர்ந்திருந்த நாகநாத சுவாமிகளுக்கு பூஜை செய்து ஆரூரா தியாகேசா என பக்தி பரவசத்துடன் தேரினை இழுத்து வர, தேரானது முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

திருத்தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டத்தையொட்டி, நாகை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று உள்ளுர் விடுமுறை
அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி