நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை மாற்றம் காரணமாக அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக கடலோர கிராமங்களில் லேசாக கடல் கொந்தளித்து கடல் சீற்றமாக காணப்பட்டு வந்தது. குறிப்பாக நேற்று இரவும் கனமழை பெய்த நிலையில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இன்று காலை கடல் சீற்றம் குறைந்து நாகை கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.