நாகை- இலங்கை கப்பல் சேவை இன்று மீண்டும் துவங்கியது

54பார்த்தது
நாகை - இலங்கை இடையே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல் சேவை ஜூன் 1-ம் தேதி முதல் மீண்டும் வழக்கம்போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறை துறைமுகம் வரை 2023 அக்டோபர் 14-ம் தேதி 'செரியாபாணி' என்ற பெயரில் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டது. 

பருவமழை மற்றும் பல காரணங்களால் அதே மாதம் 23-ம் தேதி முதல் அந்த கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் சுபம் என்ற கப்பல் நிறுவனம் மீண்டும் நாகையிலிருந்து காங்கேசன்துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் புதிய பயணிகள் கப்பல் சேவையை தொடங்கியது. இருநாட்டு பயணிகளின் ஆர்வத்தால் சனிக்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்கள் இரு மார்க்கத்திலும் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. 

வங்கக்கடலில் அடுத்தடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கடல் காற்று, கடல் சீற்றம் காரணமாக கடந்த 24-ம் தேதி முதல் வரும் 31-ம் தேதி வரை கப்பல் இயக்கம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் சேவை இன்று ஜூன் 1-ம் தேதி முதல் வழக்கம்போல நாகை - இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் 9 நாட்களுக்குப் பிறகு துவங்கியது

தொடர்புடைய செய்தி