நாகை: முத்துமாரியம்மன் கோவில் திருத்தேரோட்டம்

57பார்த்தது
நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் நடுநாயகமாக எழுந்தருளி பக்தர்களுக்கு குறைதீர்க்கும் அருள்மிகு முத்துமாரி அம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த மாதம் 30ம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை மற்றும் ரிஷப வாகனம், குதிரை வாகனம், யானை வாகனம், மகாலட்சுமி அவதாரம், வேணுகோபால் அவதாரம் உள்ளிட்டவை அம்மன் வீதி உலா சென்று அப்பகுதி மக்களுக்கு அருள் பாலித்து வந்தார். இக்கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர்ரோட்டம் இன்று நடைபெற்றது. 

தேரினை பக்தர்கள் வடம்பிடித்து துவக்கிவைத்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் திருத்தேரில் அமர்ந்திருந்த அம்மனுக்கு அர்ச்சனை செய்து தேரினை இழுத்து வர நாதஸ்வர வாத்தியம் முழங்க டிரம்ஸ் இசையுடன் தேர் வெளிப்பாளையத்தின் முக்கிய வீதிகள் வழியாக ஆடி அசைந்து சென்றது. பக்தி பரவசத்துடன் தேரினை பக்தர்கள் இழுத்து வந்தனர். இன்று மாலை செடில் உற்சவத்தில் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக தங்களது குழந்தைகளை செடில் ஏற்ற உள்ளனர்.

தொடர்புடைய செய்தி