முத்து மாரியம்மன் ஆலய கொடியேற்ற விழா

76பார்த்தது
நாகப்பட்டினம் அடுத்த வெளி பாளையம் பகுதியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. முன்னதாக கொடி ஆலயத்தை சுற்றி வலம் வந்தது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தின் முன்பு உள்ள கொடி மரத்தில் பால், பன்னீர், இளநீர், 14 வகையான பொருள்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி