நாகையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறும் போது,
எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து இந்த கூட்டணி தான் நல்ல கூட்டணி விடியலை ஏற்படுத்தப் போகிறது என கூறுவது வியப்பாக ஆச்சரியமாக உள்ளது, இதனை அண்ணா திமுக தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார். தமிழக பிரச்சினைகளுக்கு அனைத்து கட்சி எடுத்து ஒரு முடிவுக்கு ஆதரவு தரும் எடப்பாடி தற்பொழுது எட்ட்டப்பனாகிவிட்டார் என காட்ட மாட்ட தெரிவித்தார். ஜெயலலிதா ஒரு ஊழல் முதலமைச்சர் என குற்றம் சாட்டிய அண்ணாமலை அதனை தற்பொழுது மறுப்பாரா என கேள்வி எழுப்பினார். என்ன வேண்டுமானாலும் செய்யலாம் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் தமிழக மக்கள் முட்டாள்கள் அப்பாவி என பாஜக அதிமுக நினைத்தால் தமிழக மக்கள் ஒருபோதும் முட்டாளாக இருந்ததில்லை என முத்தரசன் தெரிவித்தார். அமைச்சர் பொன்முடி குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் அமைச்சர் பொன்முடி பேசிய கருத்து தவறு எனவும், அதற்காக முதலமைச்சர் அவரது கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் பொன்முடியின் பகிரங்க மன்னிப்பை ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.