நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சியாத்தமங்கையில் வீடுகளுக்கு குழாய்கள் மூலம் கேஸ் வழங்கும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன மெயின் சாலைகளில் பூமிக்கு அடியில் கேஸ் குழாய்களை புதைத்து உள்ளது. இந்த நிலையில் நாகூர் -நன்னினம் சாலை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்னர் புதிதாக அமைக்கப்பட்டது. பின்னர் அந்த சாலையில் சேதம் அடைந்த பகுதிகளுக்கு மட்டும் சீரமைத்து பராமரித்து வரப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு சுமார் ரூ. 13 கோடி ஒப்பந்தம் அடிப்படையில் பனங்குடியில் இருந்து சன்னாநல்லூர் வரை சுமார் 20 கிலோ மீட்டர் சாலை புதுபிக்கும் பணிகள் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிக்கப்பட்டது. புதிய சாலை அமைக்கப்பட்ட நிலையில் திட்டச்சேரி காந்திசாலையில் தனியார் கேஸ் நிறுவனம் மூலம் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்களை சீரமைக்கும் பணிக்கு தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்கள் செல்பவர்கள் சாலையில் நடுவில் பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.. கடந்த 1 வாரத்தில் மட்டும் 10 பேர் விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளனர்.
*நடவடிக்கை*
இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.