நாகையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பேட்டி

64பார்த்தது
நாகையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்ததாவது நாகை அரசு பொது மருத்துவமனையில் விபத்து பிரிவு 15 படுக்கைகள் வசதிகளுடன். உயர் சிகிச்சை பிரிவு, பொது வார்டு இன்று திறக்கப்பட்டுள்ளது.

ஒரத்தூர் கிராமத்தில் தொடங்கப்பட்ட மருத்துவமனையில் 1000 புற நோயாளிகள் பயன்பெறும் வகையில் இயங்கி வருகிறது. நாகை அரசு மருத்துவமனையை மூடக்கூடாது என்று பலர் கோரிக்கையை வைத்ததால், தற்போது நாகை மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.

நாகையில் 4 பேர் குழப்பம் விளைவித்து வதந்தி கிளப்பி நாகை மருத்துவமனை மூடப்படுவது போலபோராட்டத்தில் ஈடுபட்டனர். நாகையில் 150 மகப்பேறு மருத்துவம் நடைபெறுகிறது. நாகை மருத்துவமனை மூடப்பட்டதுபோல சித்தரித்து போராட்டம் நடைபெற்றது வருத்தம் அளிக்கிறது. நாகை மருத்துவமனை புதிய கட்டமைப்பு செய்யப்பட்டு வசதிகள் மேம்படுத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் நாகை மற்றும் நாமக்கல் மருத்துவக் கல்லூரி குறித்த பல புகார்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் மேலும் 20 மருத்துவ மாவட்டங்களில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களுக்கு 1021 பேர் பணி ஆணை பெற்றுள்ளனர் இவர்களில் 193 பேர் பணிக்கு வராததால் அவர்களின் பணி நியமனம் ரத்து செய்யப்பட்டு புதிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி