நாகை வெளிப்பாளையம் பகுதியில் இயங்கு வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ஒரத்தூரில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டது இந்த நிலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அதே வசதியுடன் இயங்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வந்தது இந்த நிலையில் நாகை அரசு மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட 24 மணி நேரமும் இயங்கக்கூடிய விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகள் இருதய சிகிச்சை பிரிவுகள் தீவிர சிகிச்சை பிரிவுகள் ஆகியவற்றை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை முகமது ஷாநவாஸ் கீழ்வேளூர் நாகை மாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்