மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்;

68பார்த்தது
நாகையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; அமித்ஷா பதவி விலக வலியுறுத்தி கண்டன முழக்கம்

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குள்ளான கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து இருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி பி மாலி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அம்பேத்கர் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசிய அமித்ஷாவை கண்டித்தும், அதற்கு மன்னிப்பு கோர வலியுறுத்தியும், அவர் பதவி விலக வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் 200க்கும் மேற்பட்டோர் அம்பேத்காரின் பதாய்களை கையில் ஏந்தி கண்டனம் முழக்கங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி