மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

84பார்த்தது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்டம் திருமருகல் பஸ் நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தொடர்ந்து உயர்ந்து வரும் மின்சார கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் லெனின் முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் நாகை மாலி எம். எல். ஏ கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இதில் தொடர்ந்து உயர்ந்து வரும் மின்சார கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் மாதாந்திர கணக்கெடுப்பை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் பாலு, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் காரல்மார்க்ஸ், ஒன்றியக்குழு உறுப்பினர் பிரபாகரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி