நாகப்பட்டினத்தில் ரயில் பயணிகளிடம் செல்போன், நகை உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்தவர் ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைப்பு.
நாகப்பட்டினத்தில் ரயில் பயணிகளிடம் செல்போன், பர்ஸ், நாகை உள்ளிட்டவற்றை வழிப்பறி செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்த நிலையில் இது குறித்து நாகப்பட்டினம் ரயில்வே போலீஸ் நிலையத்தில் பயணிகள் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில் பயணிகளிடம் வழிப்பறி செய்து வந்த அக்கரைபேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்த அருண் பாண்டியன் (36) ரயில்வே போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். இந்நிலையில் அருண்பாண்டியனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி ரயில்வே எஸ்பி ராஜன், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ்க்கு பரிந்துரை செய்தார். இவரது பரிந்துரையின் பேரில் அருண்பாண்டியனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டார். இதன்பேரில் நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் உள்ள அருண்பாண்டியன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைக்கப்பட்டார்.