தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தற்சமயம் அமலில் உள்ள நிலையில் நாகை மாவட்டத்தில் விசைப்படகுகள் மீன்பிடிக்க சொல்லவில்லை இதனால் பெரிய அளவிலான மீன்கள் இறால் நண்டு போன்றவை கிடைப்பதில்லை இந்த நிலையில் நாகையில் தற்சமயம் மீன் பிரியர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கோலா மீன் சீசன் களைகட்டி வருகிறது பொதுவாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மட்டுமே கிடைத்து வந்த கோலா மீன்கள் தற்சமயம் பகல் நேரத்திலும் விற்பனைக்கு வருகிறது இதனால் மீன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்