முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலு பேட்டி

1பார்த்தது
இந்தியா முழுவதுமுள்ள காங்கிரஸ் கட்சியின் சொத்துக்களை அக்கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கே வி தங்கபாலு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி நாகை மாவட்டத்தில் இன்று நாகை மாவட்ட காங்கிரஸ் அலுவலகம், நாகூர் உள்ள பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகங்கள் மற்றும் சொத்துக்களை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாக சந்தித்து பேசியவர் ;
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து ஒரு அரசியல் கட்சி வெற்றிபெற முடியாது என்பதை பணிவோடு தெரிவிக்கிறேன். தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக தற்போதும் இருப்பது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் கட்சியை யாரும் குறைத்து மதிப்பீடு செய்ய வேண்டிய தேவையில்லை வரலாறு தெரிந்தவர்கள் இப்படி சொல்லமாட்டார்கள். எங்களின் பலம் தமிழ்நாடு முதல்வருக்கு தெரியும். எங்களை பலவீனப் படுத்தி யார் சொன்னாலும் கவலையில்லை எங்களை பற்றி திமுகவிற்கு தெரியும். என்றார். மேலும்
தமிழ்நாட்டில் வெற்றிகரமான கூட்டணியை திமுக தலைமையில் அமைத்துள்ளோம். இந்த கூட்டணி வெற்றிகூட்டணி என்பதால் அனைத்து தேர்தலிலும் வெற்றிபெற்றுள்ளோம். இது மக்கள் கூட்டணி கொள்கை கூட்டணி.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி