நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் தாலுகா வாய்மேடு பவர் ஹவுஸ் அருகில் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூதன முறையில் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். தற்போது கிராமங்களில் மின்சாரம் தடைபட்டு வருவதாலும் மேலும் மூன்றாவது முறையாக விலையை உயர்த்தி உள்ளதை கண்டித்தும் அறிக்கை மற்றும் சிமிலி விளக்குடன் கண்டன கோஷங்களை எழுப்பி அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.