நாகை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கொண்டு செல்லப்பட்ட புனித நீர்

83பார்த்தது
நாகை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கொண்டு செல்லப்பட்ட புனித நீர்
நாகை நம்பியார் நகர் ஸ்ரீ புதிய ஒளி மாரியம்மன் மற்றும் நாயன்மார்களில் ஒருவரும் மீனவ குல தலைவருமாகிய அதிபத்த நாயனார் அவர்களின் புதிய கற்கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாகை ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன் கோவில் ஆலயத்திலிருந்து புனித நீர் புனித மண் எடுத்து நம்பியார் நகரில் அமையப்பெற்றுள்ள ஸ்ரீ புதிய ஒளி மாரியம்மன் மற்றும் நாயன்மார்களில் ஒருவரும் மீனவ குல தலைவருமாகிய அதிபத்த நாயனார் அவர்களின் புதிய கற்கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேக கோவில்களுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக துவக்கிவைக்கும் நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக எம்ஜிகே நிஜாமுதீன் மேனால் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு சிறப்பித்தார். உடன் நம்பியார் நகர் பஞ்சாயத்தார்களும் நாகை மாவட்ட வளர்ச்சி குழுமத்தின் நிர்வாகிகளும் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி