கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யானை மீது புனித நீர் ஊர்வலம்

1பார்த்தது
நாகப்பட்டினத்தில் அமிர்தவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ சட்டநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
பிரசித்திப் பெற்ற சிவன் தளமாக விளங்கும் இவ்வாலயத்தின் குடமுழுக்கு பெருவிழா வருகின்ற ஜூலை 7ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நாகை சாபம் தீர்த்த விநாயகர் ஆலயத்தில் இருந்து யானை மீது புனித நீர் எடுத்துவரும் ஊர்வலம் நடைபெற்றது. சிவ வாத்தியங்கள், , நாதஸ்வர கச்சேரி, என கோலாகலமாக நடைபெற்ற புனித நீர் ஊர்வலத்தில் திரளானோர் பங்கேற்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதனிடையே புனிதநீர் ஊர்வலத்தில் சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் பாடியபடி மலர்தூவி புனிதநீரை சுமந்து வந்த யானையை வரவேற்றனர். கங்கை, யமனை, சிந்து, நர்மதா உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர்கொண்டு வருகின்ற 7ஆம் தேதி காலை 9 மணி முதல் 10. 30க்குள் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி