திருமருகல் அருகே இலவச கண் பரிசோதனை முகாம்.

75பார்த்தது
திருமருகல் அருகே இலவச கண் பரிசோதனை முகாம்.
நாகை மாவட்டம் திருமருகல்
ஒன்றியம் புத்தகரம் ஊராட்சி மாதிரி மங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில்
கேதாரிமங்கலம் திராவிட கழக தலைவர் மறைந்த திருவேங்கடம் அவர்களின் நினைவாக நாகை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமை முன்னால் மாநில கூட்டுறவு வங்கியின் துணை தலைவர் எஸ். ஆசைமணி, திருவேங்கடம் நினைவு அறக்கட்டளை தலைவர் சிங்காரவேலு, செயலாளர் சௌரிராஜன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இந்த முகாமில் புத்தகரம், ஏனங்குடி, கயத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 300 -க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் அறக்கட்டளை பொருளாளர் ராஜ்குமார், துணை தலைவர் மணிவண்ணன், ராஜேஷ்குமார் அருண்குமார், பள்ளி தாளாளர் நல்லறிவாளன், புத்தகரம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாதன், ஏனங்குடி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இறையன்பு, அரவிந்த் கண் மருத்துவமனையில் மேலாளர் பரமசிவம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you