வெங்கடாஜலபதி கோவிலில் அன்னமளிப்பு விழா

85பார்த்தது
வெங்கடாஜலபதி கோவிலில் அன்னமளிப்பு விழா
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை கிராமத்தில் வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் வெங்கடாசலபதி சாமிக்கு அன்னமளிப்பு விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று வெங்கடாசலபதி சாமிக்கு அன்னமளிப்பு விழா நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், மாப்பொடி, சந்தனம், நெய், தேன், திரவியம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வெங்கடாசலபதி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான லட்டுகள் கொண்டு சாமிக்கு படையல் இடப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராமவாசிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி