துறைமுக நுழைவு பகுதியில் பைபர் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்:

75பார்த்தது
நாகை துறைமுக நுழைவு பகுதியில் பைபர் படகு கவிழ்ந்து மீனவர் மாயம்:
கடலில் தத்தளித்த ஒரு மீனவரை கடற்படையினர் மீட்டனர்: ஒருவர் நீந்தி கரை சேர்ந்த நிலையில் சித்தானந்தம் என்பவர் மாயம்:

நாகப்பட்டினம் மாவட்டம் புதிய கல்லார் பகுதியை சேர்ந்த ரத்தினவேல் என்பவருக்கு சொந்தமான ஃபைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ரத்தினசாமி, சித்தானந்தம் ஆகியோர் இன்று அதிகாலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும் பொழுது நாகப்பட்டினம் துறைமுகத்திற்குள் பைபர் படகு வந்த போது எதிர்பாராத விதமாக அலை சீற்றத்தில் படகு கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த மூன்று மீனவர்களும் தூக்கி வீசப்பட்டனர். இதனைக் கண்ட சிவகங்கை கப்பல் பணியாளர்கள் இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக கடற்படையினர் படகில் சென்று கடலில் தத்தளித்து கொண்டிருந்த ரத்தினவேலுவை மீட்டனர். மேலும் மீனவர் ரத்தினசாமி நீந்தி கரை சேர்ந்தார். படையில் இருந்த சித்தானந்தம் என்பவர் மாயமானார். அவரை கண்டுபிடிப்பதற்காக கடப்படையின தீவிர தேடுதல் வேட்டை ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் மீனவர் கிடைக்காததால் தேடுதல் பணியை கடற்படையினர் கைவிட்டனர். சம்பவம் குறித்து நாகப்பட்டினம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மீனவர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி