தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மாநில அளவிலான மணிமேகலை விருதுகள் மற்றும் வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா நடைபெற்றதை தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூரில் உள்ள மருத்துவ கல்லூரி கலையரங்கத்தில் ரூ. 49. 93 கோடி மதிப்பீட்டில் 608 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு நிதி சார்ந்த நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப. ஆகாஷ், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர். வி. பி. நாகை மாலி ஆகியோர் வழங்கினர்
இவ்விழாவில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் மரு ஆர். சரோஜினி, மாவட்ட சமூகநல அலுவலர் திருமதி. கி. திவ்யபிரபா, திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி எஸ். சித்ரா, வேளாங்கண்ணி பேரூராட்சி துணை தலைவர் திரு. தாமஸ் ஆல்வா எடிசன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) திரு. க. சக்திவேல் கலியபெருமாள், முன்னோடி வங்கி மேலாளர் திரு. ப. சந்திரசேகர், நாகப்பட்டினம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் திரு. எஸ். கே. நாயர், உதவி திட்ட அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.