நாகையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

80பார்த்தது
2024-25 ஆம் ஆண்டு பருவம் தவறிய மழையால் சேதம் அடைந்த நெல், பயறு, உளுந்து, பருத்தி, கடலை, எள் விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கூட்டுறவு வங்கியில் உள்ள விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், நெல் குவிண்டாலுக்கு 3500 ரூபாயும், கரும்பு ஒரு டன்னுக்கு 5500 ரூபாயும் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு கிடைப்பதை அரசியல் சாசனத்தில் சட்டமாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தொடர்புடைய செய்தி