நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஆகாஷ், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு குருவே சாகுபடிக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து பேசினார் அதற்கு பதில் அளித்து பேசிய மாவட்ட ஆட்சியர்
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பாக அனைத்து நீரொழுங்கி, தடுப்பு அணைகளை ஆய்வு மேற்கொண்டு சரி செய்யவும், மேட்டூர் அணையிலிருந்து வரும் தண்ணீர் கடைமடை பகுதி வரை சென்றடைவதையும் நீர்வளத்துறை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. வ. பவணந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு. ஜெ. ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் திரு. சே. கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ)திரு. வை. தயாளன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்(பொ) திரு. முத்துக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், மற்றும் விவசாயிகள் கலந்து கொண்ட