நாகப்பட்டினம் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் நாகப்பட்டினம் அடுத்த நாகூர் சில்லடி கடற்கரையில் ஆய்வு மேற்கொண்ட மதிப்பீட்டு குழுவினர் உங்கள் முதல்வன் திட்டத்தில் கடற்கரை மேம்பாட்டுக்காக 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், இதுவரை பணிகள் தொடங்காதது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.