நாகூரில் மும்மதத்தினர் பங்கேற்ற சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ;
ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் தினமும் பசித்திருந்து நோன்பு நோற்று வருகின்றனர். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் நாகூர் முஸ்லிம் ஜமாத் மற்றும் தஞ்சாவூர் காமாட்சி மருத்துவமனை இணைந்து மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் சமத்துவ இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இது இந்து முஸ்லிம் கிறிஸ்தவர் உள்ளிட்ட மதங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்து அனைவரும் நோன்பு திறந்தனர். மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக ஜாதி மத பேதமின்றி இஸ்லாமியர்களோடு அமர்ந்து அனைத்து மதத்தினரும் நோன்பு திறந்தது நெகிழ்ச்சி ஏற்படுத்தியது இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்