நாகை: மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாம் ஒத்திவைப்பு

74பார்த்தது
மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா்  ஆகாஷ் தெரிவித்துள்ளாா். 

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாகை மாவட்டத்தில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், 2-ஆவது செவ்வாய்க்கிழமை நாகை (ஒரத்தூா்) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், ஜன. 14-ஆம் தேதி (2-ஆம் செவ்வாய்க்கிழமை) நடைபெற இருந்த முகாம், அன்றைய தினம் பொங்கல் பண்டிகையொட்டி அரசு விடுமுறை என்பதால், மாற்றுத்திறனாளிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் ஜன. 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

தொடர்புடைய செய்தி