பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு

2399பார்த்தது
சௌந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் புரட்டாசி மாத 3வது சனிக்கிழமை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் பெருமாள் ஆலயங்களில் சனிக்கிழமைகளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது அதன்படி இன்று108 திவ்ய தேசங்களுள் 19- வது திவ்ய தேசமாக விளங்கும் நாகப்பட்டினத்தில் உள்ள செளந்தரராஜ பெருமாள் ஆலத்தில் 3வது சனிக்கிழமையையொட்டி மூலவருக்கு சந்தனம், பால், தயிர், எலுமிச்சை உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மூலவருக்கு துளசி மற்றும் மலர்களால் மாலை அணிவிக்கப்பட்டு சௌந்தரராஜபெருமாள் புஷ்பங்கிஅலங்காரத்தில் காட்சியளித்தார் அதனைத் தொடர்ந்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி