திருமருகல் மகாமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா தீக்குண்டம் இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்
நாகை மாவட்டம் திருமருகல் கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு பூச்செரிதல், கஞ்சி வார்த்தலுடன் தொடங்கி சிறப்பு பூஜை, அம்மனுக்கு அபிஷேக தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி தீமிதி உற்சவம் நேற்று முதல் நாள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழு தலைவர் குமரகுருபரன், செயலாளர் சேகர் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.