இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகப்பட்டினம் அபிராமி சன்னதி வாசலில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவகுருபாண்டியன் தலைமை தாங்கினார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்; தனியாருக்கு தாரை பார்க்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.