இந்திய மாணவர் சங்கத்தின் நாகப்பட்டினம் மாவட்ட பேரவை கூட்டம் நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் அமுல் காஸ்ட்ரோ தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், தனியார் பள்ளிகளின் கட்டண பள்ளியை தடுக்க வேண்டும்; பெண்கள், மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.