தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகையில் உள்ள தனியார் மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சமுதாய வளைக்காப்பு விழா நடைப்பெற்றது. கீழ்வேளூர், கீழையூர், திருமருகல், நாகை பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்துக் கொண்டனர். இந்து, கிருஷ்தவ, இஸ்லாமியர்கள் என சாதி, மதம் கடந்து கலந்து கொண்டவர்களுக்கு தமிழ் பாரம்பரிய முறைப்படி சந்தனம் பூசி, வளையல் அணிவித்து, மாலையிட்டு, மலர்கள் தூவி சடங்குகள் செய்யப்பட்டது. நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் மாவட்ட வருவாய் அலுவலர் பவனந்தி, கலந்துக் கொண்டு அட்சதை தூவி கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை தட்டினை வழங்கினர். மேலும் புளி சோறு, தயிர் சோறு, தேங்காய், சோறு, எழுமிச்சை சோறு, இனிப்பு பொங்கல் என ஐந்து வகை உணவு வகைகளை வாழை இலை போட்டு பந்தி பறிமாறப்பட்டது.