நாகை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு பேரவை கூட்டம்

75பார்த்தது
நாகை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு பேரவை கூட்டம்
நாகை மாவட்டம் திருமருகல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திருமருகல் ஒன்றிய கட்சி வளர்ச்சி நிதியளிப்பு பேரவை கூட்டம், நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பாபுஜி முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியன் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். 

கூட்டத்தில் திருமருகல் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திரட்டப்பட்ட நிதியான ரூ. 1 லட்சத்து 50 ஆயிரத்தை திருமருகல் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் மாவட்ட செயலாளர் சிவகுரு பாண்டியனிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ், இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன் நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி