இலவச சீருடைகளை வழங்கிய ஆட்சியர்

80பார்த்தது
நாகப்பட்டினம் அடுத்த காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் கலந்துகொண்டு மாவட்டத்திலுள்ள 566 பள்ளிகளில் பயிலும் 86, 762 மாணவ மாணவிகளுக்கு இலவச சீருடைகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, நாகப்பட்டினம் நகர் மன்ற தலைவர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி