நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் நகராட்சி பகுதியில் ரூபாய் 4 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் நேரடியாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கோட்டாசியர் திருமால், வருவாய் வட்டாட்சியர் திலகா, நகராட்சி ஆணையர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.