நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு நாகவல்லி சமேத நாகநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் பிரம்மோற்சவ விழா கடந்த பதினோராம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதில் நாள்தோறும் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இது திரளான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்தனர்.