பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

59பார்த்தது
. கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீர் வழங்காததால் மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் நடப்பாண்டு குருவை சாகுபடிக்காக ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி நிலத்தடி நீரை நம்பி ஆயிரம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி பணிகள்
செய்து வருகின்றனர். இந்த நிலையில் கர்நாடகத்தில் பெய்த கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக 12, 000 கன அடி நீர் திறக்க தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து மேட்டூர் அணை மாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. மேட்டூர் அணை பாசனத்திற்காக திறக்கப்பட்டதை வரவேற்கும் விதமாக நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் விவசாயிகள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதால் வேளாண்துறை உள்ளிட்ட 6 துறைகளை இணைத்து உடனடியாக சாகுபடிக்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும், 18 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான சம்பா சாகுபடி பணிகளை முடுக்கி விட வேண்டும், சம்பா சாகுபடிக்கான ஆயத்த பணிகளை தமிழக அரசு ஏற்படுத்தவும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்‌

தொடர்புடைய செய்தி