இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை நிர்வாகிகள் கூட்டம்

66பார்த்தது
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை நிர்வாகிகள் கூட்டம்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் தென்னமரக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் மூத்த உறுப்பினர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகக் குழு உறுப்பினர் மகேந்திரன், அமைப்பு சாரா பொறுப்பாளர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் கலந்துக் கொண்டு கூட்டத்தில் பேசினார்.

முன்னதாக கிளை செயலாளர் கண்ணதாசன் வரவேற்றார். கூட்டத்தில் திருமருகல் ஒன்றியத்தில் சம்பா சாகுபடி தொடங்கியுள்ள நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் உடனடியாக விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வேண்டும், உரம் மற்றும் பூச்சி மருந்துகளை தேவையான அளவுக்கு தயார் நிலையில் வைக்க வேண்டும், உரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி