மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இரண்டு கண்களும் தானம்

573பார்த்தது
நாகை வெளிப்பாளையம் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்த வீரமுத்து – அபிராமி தம்பதியினரின் மகன் சந்தோஷ். தந்தை உயிரிழந்த நிலையில் தனது தம்பி ராகுல், அக்கா தேன்மொழி மாறும் தாயை சந்தோஷ் கவனித்து வந்தார். காரைக்காலில் உள்ள மீன் கம்பெனியில் கூலி வேலைப்பார்த்து வந்த சந்தோசுக்கு சிறு வயதில் இருந்தே வலிப்பு வருவது வழக்கம்.

அதன்படி கடந்த 16ஆம் தேதி காரைக்காலில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சந்தோசுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அருகாமையில் இருந்தவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சந்தோசை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு இருப்பதாகக் கூறி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த சந்தோஷ் நேற்றைய தினம் மூளைச்சாவு அடைந்துள்ளார்.

பின்னர் சந்தோசின் உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினர்கள் முடிவெடுத்த நிலையில் திடீரென இருதய துடிப்பும் நின்றதால் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து கண்களை தானம் செய்யலாம் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் சந்தோஷின் இரண்டு கண்களும் தானம் செய்யப்பட்டன.

தொடர்புடைய செய்தி