புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

75பார்த்தது
புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகை மாவட்டம் திருமருகல் அரசு மேல்நிலைப்பள்ளியில் புகையிலை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அமுதா தலைமை தாங்கினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மைய சமூக பணியாளர் மதுமிதா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புகையிலை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மற்றும் டெங்கு குறித்து விளக்கி பேசினார். பின்னர் நான் ஒருபோதும் புகையிலை பிடிக்கவோ அல்லது புகையிலை பொருட்களை யாதொரு வடிவிலும் உட்கொள்ளவோ மாட்டேன் என மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில் உதவி தலைமை ஆசிரியர் சங்கர், சுகாதார ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி