போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

76பார்த்தது
போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கோட்டூர் கடைத்தெருவில் போதை பொருள் ஒழிப்பு, குழந்தைகளுக்கு எதிரான குற்றம் மற்றும் சுய ஒழுக்கம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. திருக்கண்ணபுரம் காவல் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் முகமது சலாவுதீன் தலைமை தாங்கினார். திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவேக்ரவிராஜ் கலந்துக் கொண்டு போதை பொருட்களால் உடல் நலம், மனநலம் கெடுவதுடன், சமூக மரியாதையும் குறையும், வாழ்க்கை முழுதும் பாதிக்கப்படும். பொது ஒழுக்கத்தைக் கடை பிடிப்பதன் மூலம் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையமுடியும். மாணவர்களின் லட்சியம் கல்வியில் மட்டும் இருந்தால் சிறந்த பதவிகளுக்கு வர முடியும் என பேசினார். மேலும், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், போதை பொருட்களை தடுக்க 9498181257 மற்றும் 8428103090 எண்ணுக்கு தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி