திருமருகல் அருகே அரசு பள்ளியில் ஆண்டு விழா

76பார்த்தது
திருமருகல் அருகே அரசு பள்ளியில் ஆண்டு விழா
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ராராந்திமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் நற்கருணைமேரி தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சங்கீதா முன்னிலை வகித்து ஆண்டு விழாவை துவங்கி வைத்தார். 

விழாவில் விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். ஆசிரியர் தமிழ்வாணி ஆண்டறிக்கையை வாசித்தார். இதில் ஆசிரியர்கள், மாணவ- மாணவியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் தமிழ்வாணி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்தி