நாகை புத்தூர் கிழக்கு கடற்கரை சாலை உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 640 பேர் மாற்று கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி டெல்டா மாவட்ட விவசாயிகளின் துயர்களை குறைந்த ஒரே கட்சி அதிமுக தான் என தெரிவித்தார்