நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் புதிய மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் நாகை, திருமருகல், கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கைகளை தெரிவித்தனர். குறிப்பாக மேட்டூர் அணையில் இருந்து குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படாத நிலையில் கடைமடை மாவட்டமான நாகையில் குறுவை சாகுபடி பொய்த்து போனது இந்த நிலையில் இன்று கல்லணையில் இருந்து சம்பா சாகுபடி மேற்கொள்வதற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது இதனை நம்பி விவசாயிகள் தற்போது உழவு பணியை தொடங்கியுள்ளனர் இந்த நிலையில் மாநில அரசின் கொள்கை முடிவின்படி 100 ஏக்கருக்கு விதை தேவை எனில் இதில் 16 சதவீதம் அரசு இருப்பு வைத்திருக்க வேண்டும் இதனால் சந்தையில் விலை மதிப்பு ஏறாமல் இருக்க அரசு இந்த கொள்கை முடிவை எடுத்துள்ளது இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1200 டன் விதை தேவை உள்ள நிலையில் வேளாண்மை துறை சார்பில் 400 டன் மட்டுமே விதை இருப்பு வைத்துள்ளதாக விவசாயிகள் வேளாண்மை துறை அதிகாரிகள் மீது குற்றச்சாட்டி விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.