வேளாண் அடுக்க அடையாள எண் அவசியம் ஆட்சியர் தகவல்

54பார்த்தது
நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் பி. எம். கிசான் திட்டத்தில் 20ஆவது தவணைத்தொகை தொடர்ந்து பெற வேளாண் அடுக்க அடையாள எண் அவசியம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகாஷ் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பி. எம். கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ. 6000 நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. தற்போது ஒன்றிய அரசால் வேளாண் அடுக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கான தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பி. எம். கிசான் 20ஆவது தவணைத் தொகை வழங்கப்படுவது நிறுத்தப்படும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 23, 033 விவசாயிகள் பி. எம். கிசான் திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர். இவர்களில் 15, 604 விவசாயிகள் மட்டுமே இதுவரை தனிப்பட்ட அடையாள எண் பெற்றுள்ளனர். மீதமுள்ள 7429 விவசாயிகள் வேளாண் அடுக்க தனிப்பட்ட அடையாள எண் பெறாமல் உள்ளனர். இவர்கள் வருகிற 31. 03. 2025இக்குள் அடையாள எண்ணை பெற்றால் மட்டுமே பி. எம். கிசான் மற்றும் பயிர் காப்பீடு திட்ட பலன்கள் கிடைக்கப்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி