நாகூரில் பூஜையறையில் விளக்கேற்றி விட்டு கோயிலுக்கு சென்ற போது கூறைவீடு தீப்பிடித்து எரிந்து விபத்து.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் பிரசாத் சத்யா தம்பதியினர் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் மாசி மகத்தை முன்னிட்டு சத்யா பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு கோவிலுக்கு சென்றுள்ளார். இதனிடையே விளக்கின் திரி கூரை மீது பட்டு அவர்களது வீடு எறிய தொடங்கியது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டின் ஒரு பகுதி முழுவதுமாக எரிந்ததில் கிரைண்டர் சமையல் பாத்திரங்கள் அத்தியாவசிய பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகை தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் அணைத்தனர் விளக்கேற்றி விட்டு கோவிலுக்கு சென்ற போது கூரை வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.