கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர் உயிரிழப்பு

52பார்த்தது
தூத்துக்குடி மாவட்டம் தெரசாபுரம் துறைமுகத்திலிருந்து கடந்த 23ஆம் தேதி காலை அருளுக்கு சொந்தமான விசைப்படகில் IND TN 12 MO 4353 விசைப்படகில் இயேசு நஸரன் செல்வன் ஜெயன் ஆண்டோ ஜார்ஜ் பேதர் என்கிற பீட்டர் ஆகிய ஆறு நபர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர் இந்த நிலையில் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து வேளாங்கண்ணி அருகே 25 நாட்டிக்கல் தொலைவில் இன்று காலை 11: 30 மணி அளவில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது பேதர் என்கிற பீட்டர் நிலை தடுமாறி கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது சக மீனவர்கள் அவரை மீட்டு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர் இந்த நிலையில் நெஞ்சுவலி காரணமாக 46 வயது மதிக்கத்தக்க பீட்டர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் சக மீனவர்கள் அருகில் இருந்த நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு உடலை எடுத்து வந்தனர் காவல்துறை விசாரணைக்கு பின்னர் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக எடுத்து செல்லப்பட்டது இது குறித்து கடலோர காவல்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இறந்த பீட்டர்க்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளன இரண்டாவது பெண் குழந்தைக்கு வரும் அக்டோபர் மாதம் திருமணம் செய்ய உள்ள நிலையில் இந்த துயர சம்பவம் நடைபெற்றதாக சக மீனவர்கள் கூறுகின்றனர்

தொடர்புடைய செய்தி